ஆகஸ்ட் 11, 2014 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி
Share
Subscribe
இன்றைய (11-08-2014) பிபிசி தமிழோசையில்
மன்னார் மாவட்டத்தில் ஒரு லட்சத்து 47 ஆயிரம் பேர் காணாமல் போயிருப்பதாக கூறப்பட்டாலும் இதுபற்றி விசாரிப்பதற்கான ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு அங்கிருந்து 312 முறைப்பாடுகளே கிடைத்திருப்பதாக அந்த ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்திருப்பது குறித்த செய்திகள்;
இலங்கை ஜனாதிபதியின் காணாமல் போனோர் நிலை குறித்து விசாரிப்பதற்கான ஆணையத்தில் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டிருக்கும் இந்திய மனித உரிமை ஆர்வலர் அவ்தாஷ் கௌஷலின் பிரத்யேக செவ்வி;
தமிழகத்தின் தடுப்பு காவல் சட்டமான குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சைபர் கிரைம் என்கிற இணைய குற்றத்தை ஒரே ஒருமுறை செய்த நபரையும் கைது செய்ய வழிவகுக்கும் வகையில் பெரும் மாற்றங்களை கொண்டு வந்திருக்கும் தமிழக அரசின் முடிவு ஏற்படுத்தியிருக்கும் விவாதங்கள் குறித்த செய்திக்குறிப்பு;
இந்தியாவின் மத்திய மாநில அரசுகளிடமிருந்து போதிய உதவிகள் கிடைத்தால் bottom trawlers என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் இழுவை வலையை பயன்படுத்தி இந்திய இலங்கை கடற்பரப்பில் மீன்பிடிப்பதை படிப்படியாக குறைத்துக்கொள்ளத்தயாராக இருப்பதாக தமிழக மீனவர்கள் அறிவித்துள்ளது குறித்து இந்திய தேசிய மீனவர் பேரவையின் தலைவர் இளங்கோவின் செவ்வி;
நிறைவாக விளையாட்டரங்கம் ஆகியவற்றை கேட்கலாம்.
