இன்றைய (ஆகஸ்ட் 13) பிபிசி தமிழோசை நிகழ்ச்சி

Aug 13, 2014, 04:24 PM

Subscribe

இன்றைய தமிழோசை நிகழ்ச்சியில் இந்தியாவில் உச்ச மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகள் நியமன வழிமுறைகளை மாற்றியமைத்து , நியமனங்களை கவனிக்க புதிய ஆணையம் ஒன்றை உருவாக்கும் சட்ட முன்வரைவு இன்று நாடாளுமன்ற மக்களவையில் நிறைவேற்றப்பட்ட்து பற்றிய செய்திக்குறிப்பு

இந்த முன்வரைவு குறித்து சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சிலரின் கருத்துக்கள்

இலங்கை பாகிஸ்தானிலிருந்து வந்து தஞ்சம் கோரிய கிறித்தவர்களை மீண்டும் பாகிஸ்தானுக்கே திரும்ப அனுப்புவதை ஐநா அகதிகள் நிறுவனம் கண்டித்திருப்பது பற்றிய செய்தி

இலங்கையில் கள்ளச்சாராய வேட்டையில் ஈடுபட்ட போலிசார் கிராமத்தில் துப்பாக்கிச்சூடு நட்த்தியது பற்றிய செய்தி

பின்னர் பலகணியில் இறந்தவர்களை எரிக்கும் மயானத்தில் பணிபுரியும் பெண்கள் பெட்டகம்

இடம் பெறுகின்றன