ஆகஸ்ட் 16, 2014 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி
Share
Subscribe
இன்றைய (16-08-2014) பிபிசி தமிழோசையில்
இலங்கையில் போர்க்கால சூழலில் சொந்த காணிகளைவிட்டு வெளியேறியவர்களின் காணி உரிமைகள் தொடர்பிலான புதிய சட்ட மசோதா பற்றிய விரிவான ஆய்வுக்கண்ணோட்டம்;
எல்லை தாண்டி வரும் தமிழக மீனவர்களில் சிலரை கைதுசெய்து, பின்னர் விடுவிப்பதால் மீனவர் பிரச்சனையை தீர்க்கமுடியாது என்று இலங்கை மீனவர்கள் தெரிவித்திருப்பது குறித்த செய்திகள்;
தமிழக மீனவர்களின் கலந்தாய்வுக்கூட்டம் ஒன்று இந்தியாவை ஆளும் பாஜகவின் மத்திய அமைச்சர் முன்னிலையில் சென்னையில் நடந்திருப்பது குறித்த செய்திகள்;
தமிழ்நாடு பாரதீய ஜனதாக் கட்சிக்கு முதல் முறையாக பெண் தலைவராக மருத்துவர் தமிழிசை சவுந்தரராஜன் நியமிக்கப்பட்டுள்ளது குறித்த செய்திகள்;
இலங்கையின் இறுதிப்போரின் நிகழ்வுகளை களமாக வைத்து தயாரிக்கப்பட்டிருப்பதாக கூறப்படும் புலிப்பார்வை திரைப்படத்தின் இசை வெளியீட்டுவிழாவில் சென்னையில் மாணவர்கள் தாக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவம் குறித்து இருதரப்பாரின் செவ்விகள்;
நேயர் நேரம் ஆகியவற்றை கேட்கலாம்.
