ஆகஸ்ட் 20, 2014 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி
Share
Subscribe
இன்றைய (20-08-2014) பிபிசி தமிழோசையில்
அமெரிக்க புகைப்படச் செய்தியாளர் ஜேம்ஸ் ஃபாலியைக் கொன்றதாக சந்தேகிக்கப்படுபவர் யார் என்று அடையாளம் காண பிரிட்டிஷ் காவல்துறையும் பாதுகாப்புப் பிரிவினரும்முயன்று கொண்டிருப்பது குறித்த செய்திகள்;
நாளை இந்தியாவுக்கு வரும் இலங்கையின் தமிழ்தேசிய கூட்டமைப்பினர் பேசவிருக்கும் விடயங்கள் குறித்து அவர்களின் செவ்வி;
காலநிலை மாற்றத்தால் இலங்கையின் பொருளாதாரத்தில் பெரும் பாதிப்பு ஏற்படும் என்று அவை குறித்த ஆசிய அபிவிருத்தி வங்கி அறிக்கை எச்சரித்திருப்பது குறித்த செய்திகள்;
இன்று காலமான உலகின் முன்னணி யோகா குருக்களில் ஒருவரான பி.கே.எஸ் ஐயங்கார் பாணி யோகா குறித்த செவ்வி;
பலகணியில் ஜிகாத்துக்குச் செல்லும் பிரிட்டன் வாழ் வங்கதேசி முஸ்லீம்களும் – அவர்களைத் தடுக்க எடுக்கப்படும் நடவடிக்கைகளும். பெட்டகம் ஆகியவற்றை கேட்கலாம்.
