ஆகஸ்ட் 21 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி

Aug 21, 2014, 05:01 PM

Subscribe

இலங்கை மீது ஐ நா மனித உரிமைகள் ஆணையத்தால் முன்னெடுக்கபடும் விசாரணைகளின் வரம்புகளை விரிவுபடுத்த வேண்டும் என்று கோரும் ஒரு பிரேரணை இலங்கையின் வட மாகாண சபையில் முன்வைக்கப்பட்டுள்ள விபரங்கள்

இந்தியாவில் உயர்நீதிபதிகளின் நியமனம் தொடர்பில் அரசு கொண்டுவந்துள்ள புதிய சட்டத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேலும் ஒரு வழக்கு தொடுக்கப்பட்டுள்ள விபரங்கள்

காவிரிப் பாசனப் பகுதியில் சம்பா விவசாயம் தொடங்கியுள்ள நிலையில், இந்தியா தமது விவசாய உத்திகளை மாற்றிக்கொள்ள வேண்டும் என ஐ நா வின் ஒரு அங்கம் வலியுறுத்தியுள்ளது பற்றிய ஒரு பார்வை

இந்தியாவின் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இரு பெண்களின் மரணம் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ள செய்திகள்

இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டி போன்று, கால்பந்துக்கான இந்தியன் சூப்பர் லீகில் பங்குபெறவுள்ள வீரர்களுக்கான ஏலம் மும்பையில் நடைபெற்றுள்ளது தொடர்பிலான செய்திகள்