ஆகஸ்ட் 24, 2014 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி
Share
Subscribe
இன்றைய (24-08-2014) பிபிசி தமிழோசையில்
திரிப்போலி சர்வதேச விமான நிலையத்தை கைப்பற்றியுள்ள இஸ்லாமிய ஆயுததாரிகளையும் அவர்களின் கூட்டாளி அணிகளையும் லிபியாவின் புதிய நாடாளுமன்றம் கண்டித்துள்ளது குறித்த செய்திகள்;
இலங்கை -இந்திய நாடுகளுக்கு இடையே நடக்கும் போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கைகளை முறியடிப்பதற்காக இருநாட்டு காவல்துறை அதிகாரிகளும் அண்மையில் புதிய உடன்பாடு ஒன்றை எட்டியிருப்பது தொடர்பான தகவல்கள்;
யாழ்ப்பாணத்தில் நாய்க்கடிக்கு உள்ளாவோரின் எண்ணிக்கை திடீரென அதிகரித்திருப்பது குறித்த தகவல்கள்;
இந்திய அரசின் மிக உயரிய விருதான "பாரத் ரத்னா" விருது தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வரும் திமுக நிறுவனர்களில் ஒருவருமான அண்ணாவுக்கு அடுத்த ஆண்டு குடியரசுதினத்தில் அளிக்க வேண்டும் என்று இந்திய அரசிடம் திமுக தலைவர் மு கருணாநிதி கோரிக்கை விடுத்திருக்கும் பின்னணியில் அண்ணாவுக்கு பாரதரத்னா விருது வழங்குமாறு திமுக திடீரென கோரியிருப்பது ஏன் என்பது குறித்து அந்த கட்சியின் வெளியீட்டுத்துறை செயலாளர் திருச்சி செல்வேந்திரனின் செவ்வி;
இந்திய அரசின் சார்பில் சிறார்களுக்கான இலக்கியவாதிகளுக்கு அளிக்கப்படும் பால சாஹித்ய அகாதெமி விருது தமிழில் இந்த ஆண்டு ஆயிஷா நடராஜன் அவர்களுக்கு அறிவிக்கப்பட்டிருக்கும் பின்னணியில் இந்த விருதுக்கு தேர்வானது குறித்து எழுத்தாளர் ஆயிஷா நடராஜனின் செவ்வி; தமிழக தலைநகர் சென்னை உருவாகி 375 ஆண்டுகள் ஆவதையொட்டி சென்னை செய்தியாளர் முரளிதரன் தயாரித்து வழங்கும் பெட்டகத்தொடரின் மூன்றாவது பகுதி ஆகியவற்றை கேட்கலாம்.
