ஆகஸ்ட் 25, 2014 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி
Share
Subscribe
இன்றைய (25-08-2014) பிபிசி தமிழோசையில்
இலங்கையின் ஜனாதிபதித் தேர்தலில் மூன்றாவது முறை போட்டியிடுவதற்கு மகிந்த ராஜபக்ஷவுக்கு சட்டப்படி தகுதியில்லை என்று முன்னாள் தலைமை நீதியரசர் சரத் என். சில்வா கூறியுள்ள கருத்துக்கள்;
இந்தியாவில் 1993ஆம் ஆண்டிலிருந்து நடைபெற்ற நிலக்கரி சுரங்க ஒதுக்கீடுகள் அனைத்தும் “நியாயமான” முறையில் நடக்கவில்லையென இந்திய உச்ச நீதிமன்றம் சாடியுள்ளது குறித்த செய்திகள்;
இந்தியாவில், நீதிபதிகள் நியமனத்திற்கான தற்போதுதைய நடைமுறையை மாற்றி அமைக்கும் இந்திய அரசின் நடவடிக்கைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள பொது நலன் மனுக்கள் மீதான விசாரணையை தற்போதைக்கு ஏற்க முடியாது என்று கூறி இந்திய உச்சநீதிமன்றம் அந்த மனுக்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்துள்ளது குறித்த செய்தி;
நேற்று காலமான பிரபல பிரிட்டிஷ் நடிகரும் புகழ்பெற்ற “காந்தி” திரைப்படத்தின் இயக்குநருமான ரிச்சர்ட் அட்டன்பரோவின் திரையுலக பங்களிப்பு குறித்த ஒரு பார்வை;
சென்னை நகர் தோன்றி 375 ஆண்டுகள் ஆவதையொட்டிய பெட்டகத்தொடரின் நான்காம் பகுதி ஆகியவற்றை கேட்கலாம்.
