ஆகஸ்ட் 27, 2014 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி
Share
Subscribe
இன்றைய (27-08-2014) பிபிசி தமிழோசையில்
ஐஎம்எஃப் எனப்படும் சர்வதேச நாணய நிதியத்தின் தலைவி கிறிஸ்டினா லகார்ட் மீது ஊழல் குற்றச்சட்டு தொடர்பான விசாரணைகளை பிரெஞ்சு நீதிமன்றம் முன்னெடுத்துள்ளது குறித்த செய்திகள்;
இலங்கையில் தன்னை தகாத வார்த்தைகள் பேசிய ஒரு ஆணை கன்னத்தில் அறைந்த பெண்மணியை காவல்துறையினர் அழைத்து விசாரித்து பின்னர் விடுவித்திருப்பது பெரும் சர்ச்சையை தோற்றுவித்திப்பது குறித்த செய்தி;
இலங்கை மட்டக்களப்பு மாவட்டம் காத்தான்குடி பிரதேசத்தில் குரங்குகளின் தொல்லையை கட்டுப்படுத்த குரங்குகளை துப்பாக்கியால் சுடுவதற்கு நகர சபை தீர்மானித்திருப்பது குறித்த செய்திகள்;
இந்தியா சென்றுள்ள தமிழ்த்தேசிய கூட்டமைப்பினர் இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தபோது தெரிவித்திருக்கும் கருத்துக்கள்;
வழக்குகளில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளவர்களை அமைச்சராக நியமிக்க இந்திய பிரதமருக்கோ, மாநில முதல்வர்களுக்கோ தடை விதிக்க முடியாது என்று இந்திய உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பது குறித்த செய்திகள்;
சன் தொலைக்காட்சிக் குழுமத்தின் கேபிள் தொலைக்காட்சி சேவையை தமிழகத்தின் தலைநகரான சென்னை மற்றும் கோயம்புத்தூர் ஆகிய நகரங்களில் வழங்குவதற்கு தேவையான உரிமத்தை இந்திய அரசு ரத்து செய்திருப்பது குறித்த செய்தி;
இன்றைய பலகணியில் இங்கிலாந்தில் உள்ள ஒரு நகரில் சுமார் 1400 சிறுமிகள் 15 ஆண்டுகாலப்பகுதியில் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளதாக சுயாதீன அறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது, இது குறித்த பிபிசி செய்திகளடங்கிய பெட்டகம் ஆகியவற்றை கேட்கலாம்.
