ஆகஸ்ட் 31, 2014 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி
Share
Subscribe
இன்றைய (31-08-2014) பிபிசி தமிழோசையில்
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் காவல்துறைக்கும் இடையிலான மோதல்கள் குறித்த செய்திகள்;
இலங்கையில் நடக்கும் கருத்தரங்கில் பங்கேற்கச்சென்ற பிரித்தானிய பல்கலைக்கழக விரிவுரையாளர் ஒருவரிடம் காவல்துறை விசாரணை நடத்தியது ஏன் என்பது குறித்து காவல்துறையின் கருத்துக்கள்;
இலங்கையில் ஊவா மாகாணசபைத் தேர்தலை ஒட்டி, பிரச்சாரங்கள் நடந்துவரும் சூழலில் அப்பிரதேசங்களில் எதிரணி அரசியல் கட்சிகளின் அலுவலகங்களை இலக்குவைக்கும் தாக்குதல்கள் அதிகரித்துவருவதாக தேர்தல் கண்காணிப்பாளர்கள் கூறியுள்ள நிலையில் ஊவா மாகாணசபைத் தேர்தல்கள் தொடர்பான மேலதிக தகவல்கள்;
திமுகவின் பொருளாளர் மு க ஸ்டாலினின் முகநூல் பக்கத்தில் விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து தெரிவித்து வெளியான செய்தி அவரது ஒப்புதல் பெறாமல் வெளியானதாக அந்த கட்சி அறிவித்திருப்பது ஏன் என்பது குறித்த செய்திகள்;
இறுதியாக நாகரீக கோமாளிகள் தொடரின் 20 ஆவது பகுதியில் நடிகர் விவேக் தனது இயக்குநர் கனவு குறித்து தெரிவித்திருக்கும் கருத்துக்கள் ஆகியவற்றை கேட்கலாம்.
