செப்டம்பர் 1 2014 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி
Share
Subscribe
இன்றைய (01-09-2014) பிபிசி தமிழோசையில்
ஹாங்காங்கின் அடுத்த தலைவரை தேர்வுசெய்வதில் சீனா புதிய விதிகளை அறிவித்திருப்பதற்கு ஹாங்காங்கின் ஜனநாயக ஆதரவு ஆர்வலர்களும், சட்டசபை உறுப்பினர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்திருப்பது குறித்த செய்திகள்;
இந்த ஆண்டுமுதல் ஆசிரியர் தினத்தை குரு உத்சவ் என்கிற பெயரில் கொண்டாட வேண்டும் என்று இந்திய அரசு உத்தரவு பிறப்பித்திருப்பதற்கு தமிழ்நாட்டில் எழுந்திருக்கும் எதிர்ப்பு குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் எழுத்தாளருமான ரவிக்குமாரின் பிரத்யேக செவ்வி;
ரவிக்குமார் உள்ளிட்ட தமிழக அரசியல் கட்சிகளின் எதிர்ப்பு குறித்து பாஜகவின் தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜனின் பிரத்யேக செவ்வி;
அரசியல் தஞ்சம் கோரி இலங்கையில் தங்கியுள்ள பாகிஸ்தான் பிரஜைகளை இலங்கை அரசாங்கம் பாகிஸ்தானிடமே ஒப்படைப்பதற்கு இலங்கையின் மேன்முறையீட்டு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது குறித்த செய்தி;
இலங்கையில் சிறுநீரக நோயாளர்கள் அதிகமாகவுள்ள இரண்டாவது மாவட்டமான வவுனியாவில் அரச பொது வைத்தியசாலையில் சிறுநீரக நோயாளர்களுக்கு இரத்தம் சுத்திகரிக்கும் பிரிவு ஆரம்பிக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டிருப்பது குறித்த செய்தி;
நிறைவாக விளையாட்டரங்கம் ஆகியவற்றை கேட்கலாம்.
