குரு உத்சவ் விவாதம்: விடுதலை சிறுத்தைகள் ரவிக்குமார்/ பாஜக தமிழிசை சவுந்திரராஜன்
Share
Subscribe
இந்தியாவில் ஆண்டுதோறும் செப்டம்பர் ஐந்தாம் தேதி ஆசிரியர் தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அந்த தினத்தை இந்த ஆண்டுமுதல் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயற்படும் சிபிஎஸ்ஸி பள்ளிகள் குரு உத்சவ் என்கிற பெயரில் கொண்டாட வேண்டும் என்று இந்திய அரசு உத்தரவு பிறப்பித்திருப்பதற்கு தமிழ்நாட்டில் எதிர்ப்பு எழுந்திருக்கிறது.
குரு உத்சவ் கொண்டாட்டங்களை தமிழக அரசியல் கட்சிகள் எதிர்ப்பது என்பது வெறும் பெயர்மாற்ற பிரச்சனை மட்டுமல்ல; அதற்குள் சமூக, கலாச்சார, உயர்ஜாதிய படிநிலை திணிப்பும் மறைமுகமாக முன்னிறுத்தப்படுவதனாலேயே தாங்கள் எதிர்ப்பதாக கூறினார் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் எழுத்தாளருமான ரவிக்குமார். இது தொடர்பாக அவர் பிபிசி தமிழோசைக்கு அளித்த பிரத்யேக செவ்வியை நேயர்கள் இங்கே விரிவாக கேட்கலாம்.
ரவிக்குமார் உள்ளிட்ட தமிழக அரசியல் கட்சிகளின் எதிர்ப்பு தேவையற்ற ஒன்று என்கிறார் பாஜகவின் தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன். இது தொடர்பாக அவர் பிபிசி தமிழோசைக்கு அளித்த பிரத்யேக செவ்வியை நேயர்கள் இங்கே விரிவாக கேட்கலாம்.
