பிரஞ்சுப் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த கிராமத்து தமிழ்ப் பெண் ஜானகி
Share
Subscribe
நாகர்கோவில் அருகிலுள்ள ஒரு கிராமத்தில் ஏழ்மையான குடும்பமொன்றைச் சேர்ந்தவரான ஜானகி பிரஞ்சுத் திரைப்படமொன்றில் முக்கியக் கதாபாத்திரத்தில் தோன்றியுள்ளார்.
மிஷெல் ஸ்பின்ஸோ என்ற இயக்குநரின் கைவண்ணத்தில் அண்மையில் பிரான்சில் வெளிவந்துள்ள சோன் எபூஸ் (அவன் மனைவி) என்ற திரைப்படத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணாக ஜானகி நடித்துள்ளார்.
ஆரல்வாய்மொழி கிராமத்தில் செங்கல்சூளைத் தொழிலாளியின் மகளான ஜானகி, கல்லூரி சென்று படிக்க வசதியில்லாமல், தெருக்கூத்துக்களில் நடித்து, பின்னர் கூத்துப்பட்டறை, தேசிய நாடகப் பள்ளி போன்றவற்றில் நடிப்பு பயிற்சி பெற்றுள்ளார்.
மாலினி 22 பாளையங்கோட்டை என்ற தமிழ் படத்தில் சிறிய வேடம் ஒன்றில் தான் ஏற்கனவே தோன்றியிருந்தாலும், பிரஞ்சுத் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தது மிகுந்த வித்தியாசமான அனுபவமாக இருந்தது என ஜானகி கூறினார்.
அப்படத்தில் பிரஞ்சு மொழியிலும் வசனங்கள் பேச வேண்டியிருந்ததால் கடுமையான மொழிப் பயிற்சி தனக்கு அளிக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
