செப்டம்பர் 3 2014 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி

Sep 03, 2014, 05:10 PM

Subscribe

இன்றைய (03-09-2014) பிபிசி தமிழோசையில்

அமெரிக்க ஊடகவியலாளரை இஸ்லாமிய தேசம் அமைப்பின் தீவிரவாதிகள் கொலை செய்திருப்பதை அமெரிக்க அதிபர் ஒபாமா கண்டித்திருப்பது குறித்த செய்திகள்;

உரிய அனுமதியின்றி சிலாபம் முன்னேஸ்வர பத்திரகாளியம்மன் தேவாலயத்தின் மிருக பலி யாகத்தை நடத்த முடியாதென இலங்கை உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது குறித்து முன்னேஸ்வரம் ஸ்ரீபத்ரகாளியம்மன் ஆலயத்தின் தலைமை பூசாரி காளிமுத்து சிவபாத சுந்தரம் பிபிசி தமிழோசைக்கு அளித்த பிரத்யேக செவ்வி;

இலங்கை சிறையில் இருக்கும் பாகிஸ்தானியர்கள் மற்றும் ஆப்கானிஸ்தானியர்கள் அனைவரையும் தடுப்பில் இருந்து விடுதலை செய்ய இலங்கை அரசு முடிவெடுத்திருப்பது குறித்த செய்திகள்;

இந்தியாவில் விடுதலைப்புலிகள் அமைப்புக்கு விதிக்கப்பட்டுள்ள ஐந்தாண்டு தடையை எதிர்த்து புலிகள் சார்பில் வாதாட வைகோவுக்கு அனுமதி மறுத்திருக்கும் இந்திய அரசின் சட்டவிரோத தடுப்புச் செயல்கள் தீர்ப்பாயம் பங்கேற்க மட்டும் அனுமதி வழங்கியுள்ளது குறித்து வைகோ வெளியிட்டுள்ள கருத்துக்கள்;

இந்தியாவின் மேற்குவங்க மாநிலத்தில் ஊர்பஞ்சாயத்தாரை எதிர்த்துப்பேசிய சிறுமி அரைநிர்வாண நிலையில் கொல்லப்பட்டுக்கிடந்த நிகழ்வு பெரும் சர்ச்சையை தோற்றுவித்திருக்கும் பின்னணியில் அது குறித்த செய்தி;

இந்தியாவில் விடுதலைப்புலிகள் அமைப்புக்கு விதிக்கப்பட்டுள்ள ஐந்தாண்டு தடையை எதிர்த்து புலிகள் சார்பில் வாதாட வைகோவுக்கு அனுமதி மறுத்திருப்பது குறித்து வைகோவின் கருத்து

நிறைவாக இன்றைய பலகணியில் நரேந்திர மோடி ஆட்சிக்கு வந்து 100 நாட்கள் நிறைவடைவதை ஒட்டிய பெட்டகம் ஆகியவற்றை கேட்கலாம்.