செப்டம்பர் 8 2014 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி
Share
Subscribe
இன்றைய (08-09-2014) பிபிசி தமிழோசையில்
ஜெனீவாவில் ஆரம்பமாகியிருக்கும் ஐநா மனித உரிமை கவுன்சிலின் 27ஆவது கூட்டத்தொடரில் இலங்கைத் தூதர் தெரிவித்திருக்கும் கருத்துக்கள்;
இலங்கை இனப்பிரச்சனைக்கு தீர்வுகாண இலங்கை அரசுடன் நிபந்தனையுடனான பேச்சுவார்த்தை நடத்த தமிழ்த்தேசிய கூட்டமைப்பு தயார் என்று சம்பந்தர் தெரிவித்திருப்பது குறித்து அவரது செவ்வி;
பிரிட்டனிலிருந்து பிரிந்து செல்ல ஸ்காட்லாந்தின் பெரும்பான்மையினர் ஆதரவளிப்பதாக கருத்துக்கணிப்புக்கள் வெளியாகியுள்ள நிலையில் ஸ்காட்லாந்துக்கு மேலதிக அதிகாரங்களை விட்டுக்கொடுக்கத்தயார் என்று பிரிட்டன் அறிவித்திருப்பது குறித்த செய்திகள்;
இந்தியா பாகிஸ்தானுக்கு இடையிலான கஷ்மீரபகுதிகளில் நீடிக்கும் வெள்ள அபாயம் குறித்த செய்திகள்;
இந்திய அரசிலை உலுக்கிய தொலைத்தொடர்புத்துறையின் 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களை மத்திய புலனாய்வுத்துறை இயக்குனர் ரஞ்சித் சின்ஹா சந்தித்தார் என்கிற புகாருக்கு அவர் முறையான விளக்கம் அளிக்க வேண்டும் என்று இந்திய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது குறித்த செய்தி;
நிறைவாக விளையாட்டரங்கம் ஆகியவற்றை கேட்கலாம்.
