தமிழ்நாடு பொருளாதார வளர்ச்சியில் பின் தங்குகிறதா ?

Sep 10, 2014, 03:05 PM

Subscribe

பல்வேறு இந்திய மாநிலங்களின் உள் நாட்டு பொருளாதார உற்பத்தி வளர்ச்சி குறித்த புள்ளி விவரங்களை வெளியிட்டிருக்கும் இந்திய அரசின், மத்திய புள்ளி விவரயியல் அலுவலகம், 2012-13ம் நிதியாண்டில், இந்திய மாநிலங்களிலேயே , பிஹார் மாநிலம்தான் 10.23 சதவீத வளர்ச்சியைப் பெற்றிருப்பதாக்க் கூறியிருக்கிறது.

இந்தப் பட்டியலில், தமிழ்நாடு 3.39 சதவீத வளர்ச்சியே பெற்று பட்டியலில் கடைசி இடத்தைப் பெற்றிருக்கிறது.

பொதுவாக பொருளாதார வளர்ச்சி கண்ட மாநிலமாகக் கருதப்படும் தமிழ்நாட்டில் இந்த வளர்ச்சி விகிதம் குறைவாக்க் காணப்படுவதற்குக் காரணம் என்ன ? தமிழ்நாடு திட்டக்கமிஷனின் முன்னாள் உறுப்பினர் பேராசிரியர் ஸ்ரீநிவாசனின் கருத்துக்கள்.