செப்டம்பர் 10 2014 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி

Sep 10, 2014, 04:52 PM

Subscribe

இன்றைய (09-09-2014) பிபிசி தமிழோசையில்

பிரிட்டனில் இருந்து ஸ்காட்லாந்த் பிரிந்துசெல்வதை எதற்கும் பிரிட்டனின் மூன்று பிரதான அரசியல் கட்சிகள் அதற்காக அறிவித்திருக்கும் அதிகாரப்பகிர்வு திட்டம் குறித்த செய்திகள்.

தமிழ்நாட்டின் மதுரைக்கு அருகில் இருக்கும் ஒரு பள்ளியில் இந்திய அரசியல் சட்டத்தை வடிவமைத்த அம்பேத்கர் குறித்த பாடம் நடத்த மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததாக எழுந்துள்ள புகார்கள் குறித்த செய்திகள்; பல்வேறு இந்திய மாநிலங்களின் உள் நாட்டுப் பொருளாதார உற்பத்தி வளர்ச்சி குறித்த புள்ளிவிபரங்களை வெளியிட்டிருக்கும் இந்திய அரசின், மத்திய புள்ளிவிவரயியல் அலுவலகத்தின் கணிப்பில் 2012-2013ஆம் நிதியாண்டில், இந்திய மாநிலங்களிலேயே , பிஹார் மாநிலம் 10.23 சதவீத வளர்ச்சியை பெற்று முதல் இடத்தை பெற்றிருப்பதுடன் இந்தப் பட்டியலில், தமிழ்நாடு 3.39 சதவீத வளர்ச்சியே பெற்று பட்டியலில் கடைசி இடத்தைப் பெற்றிருப்பதற்கு காரணம் என்ன என்பது குறித்து தமிழ்நாடு திட்டக்கமிஷனின் முன்னாள் உறுப்பினர் பேராசிரியர் ஸ்ரீநிவாசனின் செவ்வி;

சென்னையில் நடந்த கொலைவழக்கு ஒன்றில் குற்றம் சுமத்தப்பட்டிருக்கும் இலங்கையின் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வீடியோ கான்பரன்ஸ் மூலம் நீதிமன்ற விசாரணைகளில் கலந்துகொள்ளலாம் என்று அனுமதி அளித்து சென்னை நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது குறித்த செய்தி;

கடந்த 50 ஆண்டுகளில் காணாத பெருவெள்ளத்தில் சிக்கித்தவிக்கும் கஷ்மீரத்திற்கு சுற்றுலா சென்று வெள்ளத்தில் சிக்கி திரும்பிய தமிழ்நாட்டு தம்பதிகளின் அனுபவம்;

நிறைவாக பலகணியில் பாகிஸ்தானில் நடக்கும் பலவந்த மதமாற்றம் குறித்த பெட்டகம் ஆகியவற்றை கேட்கலாம்.