'ஜேவிபி அலுவலகங்கள் மீது தாக்குதல்' - கஃபே தேர்தல் கண்காணிப்பு அமைப்பு
Share
Subscribe
இலங்கையின் ஊவா மாகாண தேர்தல் பிரச்சார வேளையில் இன்று மொனராகல மாவட்டத்தில் ஜேவிபி கட்சியின் 4 அலுவலகங்கள் இலக்க தகடற்ற வாகனங்களில் வந்தவர்களால் தாக்கப்பட்டதாக கஃபே எனப்படும் தேர்தல் கண்காணிப்பு அமைப்பிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதுவரை, பிரச்சார காலத்தில் கிடைத்துள்ள 300க்கும் அதிகமான முறைப்பாடுகளில் அரச உடமைகள் துஷ்பிரயோகம், அலுவலகங்கள் மீதான தாக்குதல்கள் ஆகியவையும் அடங்குகின்றன என்கிறார் கஃபே அமைப்பின் தேசிய அமைப்பாளர் அஹமட் மனாஸ் மக்கீன். இலக்கத்தகடுகள் இல்லாத வாகனங்களின் நடமாட்டம் கவலையை கொடுப்பதாகவும் அவர் கூறுகிறார்.
இவை குறித்து மனாஸ் தமிழோசைக்கு வழங்கிய செவ்வியை இங்கே கேட்கலாம்.