செப்டம்பர் 14 2014 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி

Sep 14, 2014, 04:50 PM

Subscribe

இன்றைய (14-09-2014) பிபிசி தமிழோசையில்

பிரிட்டிஷ் தொண்டு நிறுவன ஊழியர் டேவிட் ஹெய்ன்ஸின் கொலைக்கு பொறுப்பானவர்களை பிரிட்டன் வேட்டையாடி நீதிக்கு பதில் சொல்ல வைக்கும் என பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கெமரன் எச்சரிட்திருப்பது குறித்த செய்திகள்;

இந்தியர்கள் ஹிந்தி கற்பதைப்போல இலங்கை வடமாகாண மக்கள் சிங்களம் கற்கவேண்டும் என்று யாழ்ப்பாணத்தில் இந்திய பதில் துணைத்தூதர் தெரிவித்திருக்கும் கருத்துக்கள்;

இந்திய இலங்கை கடல் எல்லைபரப்பில் மீன்பிடிக்க முடியாதவாறு தமிழ்நாட்டு மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தடுக்கப்பட்டதாக ராமேஸ்வரம் மீனவர்கள் தெரிவித்திருக்கும் புகார்கள்;

இலங்கையில் தஞ்சம் கோரியுள்ள பாகிஸ்தான், ஆப்கான் மற்றும் இரானியர்களை மீண்டும் திருப்பி அனுப்ப அரசாங்கம் ஆரம்பித்திருப்பதை தடுக்குமாறு கோரி இலங்கை உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது குறித்த செய்திகள்;

நிறைவாக தமிழ்த்திரைப்படத்துறையின் நகைச்சுவை நடிகர், நடிகைகள் குறித்த நாகரிக கோமாளிகள் சிறப்புத்தொடரின் 22 ஆவது பகுதி ஆகியவற்றைக் கேட்கலாம்.