செப்டம்பர் 15 2014 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி

Sep 15, 2014, 04:48 PM

Subscribe

இன்றைய (15-09-2014) பிபிசி தமிழோசையில்

தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்புவழக்கின் தீர்ப்பு செப்டம்பர் 20 ஆம் தேதி வழங்கப்படும்போது தன்னுடைய பாதுகாப்பு காரணங்களுக்காக சிறப்பு நீதிமன்றம் இயங்கும் இடத்தை மாற்ற வேண்டுமென ஜெயலலிதா கோரியிருப்பது குறித்த செய்திகள்;

2016 ஆம் ஆண்டு நடக்கவிருக்கும் தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுகவின் முதல்வர் வேட்பாளர் அந்த கட்சியின் தலைவர் மு கருணாநிதியா அல்லது அவரது மகன் மு க ஸ்டாலினா என்பது குறித்து அவர்கள் இருவரின் ஆதரவாளர்கள் மத்தியில் சமீபகாலமாக மோதல்கள் நடந்துவந்த பின்னணியில் 2016 ஆம் ஆண்டு நடக்கும் தமிழக சட்டமன்றத்தேர்தலில் கருணாநிதியே திமுகவின் முதல்வர் பதவிக்கான வேட்பாளராக தொடர்வார் என்று மு க ஸ்டாலினே அறிவித்திருப்பது குறித்த செய்தி;

பிரபல இந்திய நடிகை தீபிகா பாதுகோன் தனது கவர்ச்சியான தோற்றத்தை அளவுக்கு அதிகமாக வெளிகாட்டும் விதமான புகைப்படத்தை வெளியிட்டு அதை கேள்விக்குள்ளாக்கும் விதமாக இந்திய தினசரி நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டிருந்ததை நடிகை தீபிகா பாதுகோன் கடுமையாக விமர்சித்திருப்பது குறித்த செய்தி;

நடிகைகளின் உடைகள் குறித்து விமர்சிக்க ஊடகங்களுக்கு உரிமையோ தகுதியோ இல்லை என்று நடிகை குஷ்பு தெரிவித்திருக்கும் கருத்துக்கள்;

இந்தியாவில் மாட்டிறைச்சி ஏற்றுமதி வர்த்தகத்தை தடுக்கவேண்டும் என்று மத்திய அமைச்சர் மேனகா காந்தி கோரியுள்ளது குறித்த செய்திகள்;

மாத்தளை மாவட்டம் தம்புள்ள பிரதேசத்திலுள்ள ஹைரியா ஜும்மா பள்ளிவாசல் மீது இன்று அதிகாலை குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பள்ளி வாசல் நிர்வாகம் தெரிவித்திருப்பது குறித்த செய்தி;

அடுத்த மாதம் துவங்க இருக்கும் புனித ஹஜ் பயணத்துக்கு முன்னதாக, சௌதி அரேபியாவில் உயிர்க்கொல்லி நோயான 'மெர்ஸ்' பரவுவதைத் தடுக்க தங்களாலான அனைத்தையும் செய்துவருவதாக சௌதி அரேபியாவின் சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியிருப்பது தொடர்பான செய்தி;

நிறைவாக விளையாட்டரங்கம் ஆகியவற்றை கேட்கலாம்.