செப்டம்பர் 17 2014 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி

Sep 17, 2014, 04:51 PM

Subscribe

இன்றைய (17-09-2014) பிபிசி தமிழோசையில்

தமிழ்நாட்டின் திருப்பூரில் தங்கி வர்த்தகம் செய்யும் நைஜீரிய நாட்டவரகளுக்கு எதிராக உள்ளூர் தயாரிப்பாளர்கள் போராட்ட்த்தில் குதித்திருப்பது குறித்த செய்திகள்;

இந்தியாவின் விளையாட்டுத்துறையில் உயரிய விருதான அர்ஜுனா விருதுக்கான தேர்வு தொடர்ந்து சர்ச்சையை எழுப்பும் விஷயமாகவே இருப்பது ஏன் என்பது குறித்த ஒரு ஆய்வு;

சத்தீஷ்கர் மாநில அரசு பாலின மாற்று சிகிச்சைக்கு நிதியளிக்க முடிவெடுத்திருக்கும் நிலையில் தமிழ்நாட்டில் நடக்கும் இத்தகைய இலவச பாலின மாற்று அறுவை சிகிச்சைகள் குறித்த ஒரு செவ்வி;

இலங்கையில் எரிபொருட்களின் விலையை குறைக்கப் போவதாக இலங்கை அரசாங்கம் அறிவித்திருக்கும் நிலையில் இது ஒரு அரசியல் நோக்கம் கொண்ட முடிவு என்று அங்குள்ள எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் கூறிவரும் பின்னணியில் இந்த விலைக்குறைப்பு எந்த அளவுக்கு பொருளாதார அடிப்படையில் சாத்தியமானது என்பது குறித்த ஆய்வுக்கண்ணோட்டம்;

நிறைவாக நாளை நடக்கவிருக்கும் ஸ்காட்லாந்து பிரிவினைக்கான பொதுமக்கள் வாக்கெடுப்பு குறித்த பலகணி ஆகியவற்றை கேட்கலாம்.