ராஜனி திரணகம : 'பாதிக்கப்பட்டவர்களின் பொறுப்பையும் வலியுறுத்தியவர்'

Sep 21, 2014, 02:08 PM

Subscribe

இலங்கையின் முக்கிய மனித உரிமைப் போராளிகளில் ஒருவரான ராஜனி திரணகம அவர்கள் கொலை செய்யப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவு பெறுகின்றன.

யாழ்ப்பாணத்தின் பல்கலைக்கழக மருத்துவ பீட விரிவுரையாளராக இவர் பணியாற்றிய காலகட்டத்தில், அங்கு தமிழ் இயக்கங்கள், இந்திய மற்றும் இலங்கை இராணுவங்கள் ஆகியவற்றால் நடத்தப்பட்டதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்து ஆவணப்படுத்தும் வகையில் இவராலும், இவரது சக ஆசிரியர்கள் சிலராலும் எழுதப்பட்ட ''முறிந்தபனை' என்ற நூல் மிகவும் பிரபலமாகப் பேசப்பட்ட ஒன்று.

இவரது நினைவு தினத்தை முன்னிட்டு இலங்கையில் யாழ்ப்பாணத்தில் சில நிகழ்வுகளும் ஏற்பாடாகியிருந்தன.

ராஜனி திரணகம மனித உரிமைகள் தொடர்பில் ஆற்றிய பங்களிப்பு குறித்து அவரோடு சேர்ந்து அந்தக் காலகட்டத்தில் பணியாற்றிய மனித உரிமைச் செயற்பாட்டாளரான சிறிதரன் அவர்களது செவ்வியை இங்கு கேட்கலாம்.