செப்டம்பர் 21 2014 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி
Share
Subscribe
இன்றைய (21-09-2014) பிபிசி தமிழோசையில்
ஊவா மாகாணசபைத் தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு வெற்றிபெற்றிருந்தாலும் ஆளுங்கட்சியின் வாக்குகள் கணிசமான அளவு சரிந்திருப்பது எதனைக் காட்டுகின்றன என்றொரு அலசல்;
இலங்கையின் முக்கிய மனித உரிமை செயற்பாட்டாளர்களில் ஒருவரான ராஜனி திரணகம கொலை செய்யப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவு பெறும் நிலையில் அவரது பங்களிப்பு குறித்த ஒரு கண்ணோட்டம்;
புவி வெப்பமடைந்துவருவதால் ஏற்படும் பருவநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்த அரசுகள் உடனடி நடவடிக்கைகள் எடுக்க வலியுருத்தி இன்று நடக்கும் உலகுதழுவிய பேரணிகள் குறித்த செய்திகள்;
தென்னிலங்கையின் களுத்துறை மாவட்டம் கட்டுக்குருந்த பிரதேசத்தில் காவல்துறையினருக்கும் பொதுமக்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் பலர் காயமடைந்துள்ளது குறித்த செய்திகள்;
புவி வெப்பமடைந்துவருவதால் ஏற்படும் பருவநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்த அரசுகள் உடனடி நடவடிக்கைகள் எடுக்க வலியுறுத்தி இன்று உலகு தழுவிய பேரணிகள் நடந்துகொண்டிருப்பது குறித்த செய்திகள்;
நிறைவாக நாகரீகக் கோமாளிகள் தொடரின் 23ஆம் பகுதி ஆகியவற்றை கேட்கலாம்.
