“ஜெயலலிதாவை ஐஏஎஸ் அதிகாரிகள் சிறையில் சந்திப்பது தவறு”

Sep 28, 2014, 05:11 PM

Subscribe

நீதிமன்றத்தால் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டு பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் முன்னாள் முதல்வர் ஜெ ஜெயலலிதாவை, தமிழ்நாட்டின் முன்னாள் தலைமைச் செயலாளரும் தமிழக முதல்வரின் ஆலோசகருமான ஷீலா பாலகிருஷ்ணன் உள்ளிட்ட ஐஏஎஸ் அதிகாரிகள் சிலர் நேரில் சிறைக்குச் சென்று சந்திக்க முயன்ற செயல் சட்டப்படி தவறானது என்கிறார் முன்னாள் ஐ ஏ எஸ் அதிகாரி சிவகாமி.

அதுவும் தமிழ்நாட்டில் ஆளும் அதிமுகவினர் பரவலான வன்முறையில் ஈடுபட்டுக்கொண்டும் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்திருக்கும் பின்னணியில் மாநிலத்தின் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவேண்டிய இடத்தில் இருக்கும் தலைமைச்செயலாளர் அந்தஸ்துள்ள ஐஏஎஸ் அதிகாரிகளின் இத்தகைய சந்திப்புக்கள் தவறான சமிக்ஞைகளை அனுப்பும் என்கிறார் சிவகாமி.