செப்டம்பர் 28 2014 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி
Share
Subscribe
இன்றைய (28-09-2014) பிபிசி தமிழோசையில்
அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா ஊழல் குற்றச்சாட்டின்கீழ் தண்டிக்கப்பட்டு அவரது முதல்வர் பதவி பறிபோன நிலையில் தமிழக முதல்வராக ஓ பன்னீர்செல்வம் இரண்டாவது முறையாக அதிமுகவில் தேர்வு செய்யப்பட்டிருப்பது குறித்த செய்திகள்;
தமிழ்நாட்டில் இரண்டாவது நாளாக நீடிக்கும் ஆளும் கட்சியினரின் வன்முறைகளுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருக்கும் டிராபிக் ராமசாமியின் செவ்வி;
பெங்களூர் சிறையில் இருக்கும் ஜெயலலிதாவை, தமிழ்நாட்டின் முன்னாள் தலைமைச்செயலாளரும் தமிழக முதல்வரின் ஆலோசகருமான ஷீலா பாலகிருஷ்ணன் உள்ளிட்ட ஐ ஏ எஸ் அதிகாரிகள் நேரில் சந்திக்கச் சென்றது சரியா என்பது குறித்த அலசல்;
பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் ஜெயலலிதாவின் இன்றைய நிலவரம் என்ன என்று பெங்களூரில் இருந்து நேரடித்தகவல்கள்;
ஜெயல லிதாவுக்கு சிறைத்தண்டனை அளிக்கப்பட்டிருப்பது குறித்து சென்னை பொதுமக்கள் சிலரின் கருத்துக்கள்;
மோடியின் அமெரிக்க பயணதில் அவருக்கு கிடைக்கும் வரவேற்பு மற்றும் எதிர்ப்புகள் குறித்த செய்திகள் ஆகியவற்றைக் கேட்கலாம்.
