வெளிநாடு வாழ் இந்திய வம்சாவளியினருக்கு விசா சலுகை: அமெரிக்காவில் மோடி

Sep 29, 2014, 03:45 PM

Subscribe

அமெரிக்கா சென்றுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி அங்குவாழும் இந்திய பூர்வீகம் கொண்ட மக்கள் மத்தியில் உரையாற்றுகையில், வெளிநாடு வாழ் இந்தியப் பூர்வீகத்தினர் இந்தியாவுக்கு வாழ்நாள் முழுக்க விசா இல்லாமல் பயணம் செய்ய தனது அரசாங்கம் ஏற்பாடு செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

மேலும் அமெரிக்கப் பிரஜைகளுக்கு கூடுதல் காலத்துக்கான இந்திய விசா வழங்கவும் ஏற்பாடு செய்யப்படும் என்று அவர் வாக்குறுதி அளித்துள்ளார்.

மோடியின் அறிவிப்பு தொடர்பில் அனைத்திந்திய பயண முகவர்கள் சம்மேளனத்தின் கமிட்டி உறுப்பினர் பஷீர் அகமது தெரிவிக்கும் கருத்துகள் அடங்கிய செய்திக் குறிப்பை நேயர்கள் இங்கு கேட்கலாம்.