இன்றைய (செப்டம்பர் 29) பிபிசி தமிழோசை நிகழ்ச்சி
Share
Subscribe
இன்றைய தமிழோசை நிகழ்ச்சியில்
தமிழ் நாட்டில் ஜெயலலிதா ஊழல் குற்றச்சாட்டில் குற்றவாளியாகத் தீர்ப்பளிக்கப்பட்டு பதவியிழந்திருக்கும் நிலையில், புதிய முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் பதவியேற்றிருப்பது பற்றிய தகவல்கள்.
சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்றுள்ள ஜெயலலிதா, தனது தண்டனைக்கு எதிராக மேல் முறையீடு செய்திருப்பது பற்றிய செய்தி
இலங்கையில் இனச் சிறுபான்மையினர் உள்பட அனைவரும் சிங்கள அடையாளத்துடனே அழைக்கப்படவேண்டும் என்று பொது பல சேன கோரியிருப்பது பற்றிய செய்தி
சுமார் 6 மாதங்களுக்கு முன்னால் ராணுவத்தினரால் தடுத்து வைக்கப்பட்ட வன்னி பெண்மணி ஜெயக்குமாரியை விடுதலை செய்யக்கோரி கொழும்பில் நடந்த ஆர்ப்பாட்டம் பற்றிய செய்தி
பின்னர் விளையாட்டரங்கம் ஆகியவை
இடம் பெறுகின்றன
