சுத்தமான இந்தியா இயக்கம் - 'உள்ளாட்சி சபைகளுக்கு அதிகாரங்கள் வேண்டும்'
Share
Subscribe
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று சுத்தப்படுத்தும் இயக்கம் என்ற முயற்சியைத் தொடங்கிவைத்துள்ளார். ஆனால், பொது வெளியை சுகாதாரமாகவும் சுத்தமாகவும் வைத்துக்கொள்ள மக்கள் மத்தியில் விழிப்புணர்வு இல்லாத நிலையில், இது போன்ற மேலிருந்து எடுக்கப்படும் முயற்சிகள் பலனைத் தருமா என்பது குறித்து சென்னை சிட்டி கனக்ட் என்ற சென்னை மாநகரைத் தூய்மையாக வைத்துக்கொள்வதில் ஈடுபட்டிருக்கும் தன்னார்வ நிறுவனத்தின் திட்ட இயக்குநர் ராஜ் செருபால் ( Raj Cherubal) அவர்கள் பிபிசி தமிழோசைக்குத் தெரிவிக்கும் கருத்துக்கள்.
