'கலப்பு மணத்தை அங்கீகாரமற்றதாக்க போலிசாருக்கு அதிகாரமில்லை'
Share
Subscribe
வலது சாரி இந்துக் குழுக்களிடம் இருந்து அழுத்தம் வந்ததையடுத்து இந்தியாவின் மத்திய பிரதேச மாநிலத்தில் கிறிஸ்தவ ஆணுக்கும் இந்துப் பெண்ணுக்கும் இடையிலான திருமணத்தை ரத்து செய்ததாக பொலிசார் கூறுகின்றனர். இருவருமே இந்துவாக இருந்தால் மட்டுமே இந்துமுறைப்படி திருமணம் செய்ய முடியுமென பெண் வீட்டார் தரப்பில் வாதிடப்படுகிறது இருவருமே இந்துவாக இருந்தால் மட்டுமே இந்துமுறைப்படி திருமணம் செய்ய முடியுமென பெண் வீட்டார் தரப்பில் வாதிடப்படுகிறது பெண் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்துவந்த நிலையில் இந்த இளம் ஜோடி வீட்டிலிருந்து ஓடிப்போய் இந்து முறைப்படி திருமணம் செய்துகொண்டிருந்தது. வலது சாரி இந்துக் குழுக்கள் இது சம்பந்தமாக போராட்டங்கள் செய்து, அரசு கட்டிடங்களைத் தாக்குவோம் என அச்சுறுத்திய நிலையில், உள்ளூர் பொலிசார் இந்த ஜோடியைத் தேடிப் பிடித்து அவர்களைப் பிரித்ததாக பொலிசார் பிபிசியிடம் தெரிவித்தனர். இருவரும் சட்டபூர்வமாக திருமணம் செய்து கொள்ளும் வயதை எட்டியவர்கள். இந்த நிலையில், உள்ளூர் எதிர்ப்பை அடுத்து இந்தத் திருமணத்தை ரத்து செய்ய போலிசாருக்கு அதிகாரம் இருக்கிறதா என்ற கேள்விகள் எழுப்பப்பட்டுவருகின்றன. இந்தக் கேள்விக்கு பதிலளிக்கிறார் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தின் பொருளாளர் சம்கி ராஜ் அவர்கள்
