"பொதுமக்களும் வர்த்தகர்களும் தாமாக முன்வந்து முழு அடைப்பை நடத்தச் சொன்னார்கள்"
Share
Subscribe
பொதுமக்களின் முழு ஆதரவோடு இந்த முழு கடையடைப்பு நடத்தப்பட்டுள்ளது என்றும், இந்த முழு அடைப்பினால் பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்பு இல்லை என்றும் புதுச்சேரி அதிமுக சட்டமன்றத் துணைத்தலைவரான அன்பழகன் தமிழோசையிடம் தெரிவித்தார்.
பொதுமக்களும் வர்த்தகர்களும் தாமாகவே முன்வந்து கடைகளை கடையடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கச் சொன்னதால்தான் தாம் இப்போராட்டத்தை நடத்தியதாக அவர் குறிப்பிட்டார்.
தங்களின் தலைவர் விடுதலையாகும் வரை உண்ணாவிரதம், பிரார்த்தனைக் கூட்டங்கள் போன்ற வழிகளில் தமது போராட்டம் தொடரும் என அன்பழகன் கூறினார்.
