அக்டோபர் 4, 2014 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி
Share
Subscribe
இன்றைய (04-10-2014) பிபிசி தமிழோசையில்
வடக்கு மற்றும் தெற்கு கொரியாக்களிடையே மீண்டும் பேச்சுவார்தைகள் துவங்கியிருப்பது குறித்த செய்திகள்;
அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா ஊழல் குற்றச்சாட்டின்கீழ் தண்டிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருப்பதை எதிர்த்து இன்று பாண்டிச்சேரியில் நடந்த பந்த் குறித்து அந்த கட்சியின் கருத்துக்கள்;
வணிகர்கள் தாங்களாகவே விரும்பி கடைகளை அடைப்பதாக அதிமுக தரப்பில் கூறப்படுவது சரியா என்பது குறித்து வணிகர் சங்கத்தின் கருத்து;
மதுரையில் ஜாதிக்கு வெளியே காதலித்த பெண்ணின் சந்தேக மரணம் கவுரவக்கொலையாக இருக்கலாம் என்று தலித் செயற்பாட்டாளர்கள் சந்தேகம் தெரிவித்திருப்பது குறித்த செய்திகள்;
இலங்கையில் 2012-ம் ஆம் ஆண்டு வவுனியா சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதல்களின்போது கொல்லப்பட்ட மரியதாஸ் தில்ருக்ஷன் எனும் கைதியின் மரணம் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மீறல் மனுவை விசாரிப்பதற்கு உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது குறித்த செய்தி;
நிறைவாக நேயர் நேரம் ஆகியவற்றைக் கேட்கலாம்.
