அக்டோபர் 5, 2014 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி
Share
Subscribe
இன்றைய (05-10-2014) பிபிசி தமிழோசையில் முதலில் செய்தியறிக்கை பின்னர் தொடரும் செய்தியரங்கத்தில்,
ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டு பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை தமிழ்நாட்டு சிறைக்கு மாற்றவேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கோரியிருப்பது குறித்த செய்தி;
ஜெயலலிதாவுக்கு ஆதரவு தெரிவித்து அக்டோபர் 7 ஆம் தேதி திங்கட்கிழமை தனியார் பள்ளிகள் மூடப்பட்டிருக்கும் என்று அறிவித்திருக்கும் தமிழக தனியார் பள்ளி சங்கங்களின் கூட்டமைப்பின் கருத்துக்கள்;
இலங்கை சபரகமுவை பல்கலைக்கழக நிர்வாகத்துக்கும் மாணவர்களுக்கும் இடையிலான முரண்பாடுகள் காரணமாக, பல்கலைக்கழகம் காலவரையின்றி மூடப்பட்டிருப்பது குறித்த செய்திகள்
குடும்ப வாழ்க்கை குறித்து ஆராய்வதற்காக வத்திக்கானில் நடக்கும் இரு வாரகால உயர் மட்ட ஆலோசனைக் கூட்டம் ஆரம்பித்துள்ளது குறித்த செய்தியின் பின்னணியில் இத்தகைய ஆலோசனைக் கூட்டத்தை வத்திக்கான் திருச்சபை தற்போது நடத்துவதன் பின்னணி என்ன என்பது குறித்த ஆய்வுக்கண்ணோட்டம்;
நிறைவாக நாகரிக கோமாளிகள் தொடரின் 24 ஆம் பகுதி ஆகியவற்றை கேட்கலாம்.
