மூளையின் ஜிபிஎஸ் சிஸ்டம்: கண்டுபிடித்தவர்களுக்கு நோபல் பரிசு
Share
Subscribe
நமது மூளையின் ஜிபிஎஸ் சிஸ்டம், அதாவது நாம் எங்கே இப்போது இருக்கிறோம் என்பதை நமது மூளை எப்படி அறிந்துகொள்கின்றது என்கின்ற மூளையின் தொழிற்பாட்டை கண்டுபிடித்த மூன்று விஞ்ஞானிகளுக்கே இந்த ஆண்டின் உடற்கூறியல் அல்லது மருத்துவத் துறைக்கான நோபல் பரிசு கிடைத்திருக்கின்றது.
பிரிட்டனில் இருந்து பணியாற்றும் பேராசிரியர் John O'Keefeக்கு ஒரு பகுதியும் நார்வேயைச் சேர்ந்த May-Britt Moser மற்றும் Edvard Moser தம்பதியருக்கு ஒரு பகுதியுமாக இம்முறை மருத்துவத்துறைக்கான நோபல் பரிசு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.
