அக்டோபர் 8, 2014 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி

Oct 08, 2014, 05:41 PM

Subscribe

இன்றைய (08-10-2014) பிபிசி தமிழோசையில்

ஐநா மனித உரிமைக் கவுன்சிலில் மனித உரிமைகளுக்கான வல்லுநர் குழுவில் இலங்கையின் மனித உரிமை நிலவரம் குறித்து நேற்றும் இன்றும் விவாதிக்கப்பட்டுவருவது குறித்த நேரடித்தகவல்கள்;

தன்னை சந்திக்கவந்த அமெரிக்க அதிகாரிகளிடம் தான் தெரிவித்த கருத்துக்கள் குறித்து இலங்கை வடமாகாண முதல்வர் அளித்த செவ்வி;

இலங்கையின் தமிழ்த்தேசிய கூட்டமைப்பிற்குள் நிலவும் உள்முரண்பாடுகள் வெளியாகியிருப்பது குறித்த இருதரப்பாரின் கருத்துக்கள்;

சென்னையிலிருந்து சுமார் 70 கி.மீ. தொலைவில் அமைந்திருக்கும் கல்பாக்கம் அணுமின் நிலைய வளாகத்தில் மத்தியத் தொழில் பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 3 பேர் கொல்லப்பட்டது குறித்த செய்திகள்;

பிளிப்கார்ட் என்கிற இணைய வணிக தளம் நடத்திய ‘பிக் பில்லியன் டே’ என்ற தள்ளுபடி விற்பனை தொடர்பில் அரசுக்கு புகார்கள் வந்துள்ளதாகவும், அது தொடர்பில் இந்திய அரசு ஆராயும் என்றும் இந்தியாவின் வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துளது குறித்த செய்திகள்;

மலேசியாவில் நடைமுறையில் இருக்கும் தேசத் துரோகச் சட்டம் விலக்கிக் கொள்ளப்பட வேண்டும் என்று ஐ நா வின் மனித உரிமைகள் ஆணயத்தின் வல்லுநர்கள் கோரியுள்ளது குறித்த செய்திகள்;

துருக்கியில் குர்து இன போராட்டக்காரர்களுக்கும், காவல்துறையினருக்கும் இடையிலான மோதல்களில் 12 பேர் கொல்லப்பட்டிருப்பது குறித்த செய்திகள் ஆகியவற்றைக் கேட்கலாம்.