அக்டோபர் 12, 2014 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி
Share
Subscribe
இன்றைய (12-10-2014) பிபிசி தமிழோசையில்
இந்தியாவின் கிழக்கு கரையோரப் பகுதிகளை மணிக்கு 180 கிலோமீட்டர் வேகத்தில் தாக்கிய ஹுத்ஹுத் புயலின் சேதங்கள் குறித்த செய்திகள்
மூன்று நாள் பயணமாக இலங்கை வடபகுதிக்குச் சென்றுள்ள இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்ச, வடமாகாண அபிவிருத்தியில் இலங்கை அரசுடன் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு ஒத்துழைக்க மறுப்பதாக கடுமையாக சாடியிருப்பது குறித்த செய்திகள்;
டைப் ஒன் டயபடீஸ் என்று அழைக்கப்படும் முதல்ரக நீரிழிவு நோயை குணப்படுத்துவதற்கான புதியதொரு வழியைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் தாங்கள் கணிசமான முன்னேற்றத்தை சாதித்திருப்பதாக ஹாவர்ட் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் தெரிவித்திருப்பது குறித்த செய்தி;
இந்தோனேஷியாவில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குகை ஓவியங்கள் மனித வரலாற்றில் ஓவியம் என்கிற கலைவடிவம் தோன்றிய காலம் எது என்பது தொடர்பில் இதுவரை நிலவி வந்த கருத்தாக்கத்தை தலைகீழாக மாற்றியமைத்திருப்பது குறித்த செய்தி;
நிறைவாக நாகரிகக்கோமாளிகள் தொடரின் 25 ஆவது நிறைவுப்பகுதி ஆகியவற்றை கேட்கலாம்.
