அக்டோபர் 13, 2014 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி
Share
Subscribe
இன்றைய (13-10-2014) பிபிசி தமிழோசையில்
இலங்கையின் உள்நாட்டுப் போர் காரணமாக 24 ஆண்டுகளாக நிறுத்தப்பட்டிருந்த யாழ்ப்பாண ரயில்சேவை மீண்டும் இன்று தொடங்கப்பட்டிருப்பது குறித்த செய்திகள்;
இலங்கையின் தெற்கையும் வடக்கையும் இணைக்கும் இந்த ரயில்சேவை காரணமாக யாழ்ப்பாண பொருளாதாரத்தில் மாற்றம் ஏற்படுமா என்பது குறித்த ஆய்வுக்கண்ணோட்டம்;
இந்தியாவில் வீசிய ஹுத் ஹூத் புயலில் ஏற்பட்ட சேதங்கள் குறித்த விரிவான செய்திகள்;
இந்திய தொலைத்தொடர்புத்துறையின் முன்னாள் அமைச்சர் தயாநிதி மாறன் மற்றும் அவரது சகோதரர் கலாநிதி மாறன் ஆகியோர் பிரதான குற்றவாளிகளாக குற்றம் சாட்டப்பட்டுள்ள ஏர்செல்-மேக்சிஸ் ஒப்பந்தம் தொடர்பான வழக்கில் அவர்களை நேரில் ஆஜராகும்படி கோரும் சம்மன் அனுப்ப வேண்டும் என்கிற சிபிஐயின் கோரிக்கை குறித்த தனது உத்தரவை அக்டோபர் மாதம் 29-ம் தேதி பிறப்பிப்பதாக நீதிபதி அறிவித்திருப்பது குறித்த செய்திகள்;
இந்த ஆண்டுக்கான பொருளாதாரத்துறைக்கான நோபெல் பரிசு பிரான்ஸைச் சேர்ந்த Jean Tirole க்கு அளிக்கப்பட்டிருப்பது குறித்த செய்திகள்;
மூளையில் இருக்கும் நியூரான்களில், உடலில் சுரக்கும் ஆக்ஸிடோக்ஸின் என்ற ஹார்மோனுக்கு ஏற்ப மாறுகின்ற ஒரு சில நியூரான்கள்தான் ஒருவரது பாலுணர்வைக் கட்டுப்படுத்துகின்றன என்பதை எலிகளில் ஆய்வு நடத்தி விஞ்ஞானிகள் கண்டறிந்திருப்பது குறித்த செய்திகள்;
நிறைவாக விளையாட்டரங்கம் ஆகியவற்றை கேட்கலாம்.
