அக்டோபர் 17, 2014 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி
Share
Subscribe
இன்றைய (17-10-2010) பிபிசி தமிழோசையில்
ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டு சிறையில் இருக்கும் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு இந்திய உச்சநீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியிருப்பது குறித்த செய்திகள்;
ஜெயலலிதாவுக்கு ஜாமீன் கிடைத்திருப்பதை அவரது கட்சியினர் இன்று சென்னையில் மகிழ்ச்சியாக கொண்டாடி மகிழ்ந்திருப்பது அது குறித்த செய்திகள்;
உச்சநீதிமன்றம் ஜாமீன் கொடுத்து உத்தரவிட்ட நிலையில் பெங்களூரு சிறையில் இருக்கும் ஜெயலலிதாவும் மற்றவர்களும் இன்று விடுவிக்கப்படாததன் சட்ட நடைமுறைகள் குறித்த விவரங்கள்;
இந்த வழக்கில் முன்பு ஜெயலலிதாவுக்கு எதிராக வாதாடிய மூத்த வழக்கறிஞர் நாரிமன் இன்று அவருக்கு ஆதரவாக ஜாமீன் கோரியது தவறான செயல் என்று திமுகவைச் சேர்ந்த வழக்கறிஞர் சண்முகசுந்தரம் விமர்சித்திருந்தது சரியான விமர்சனமா என்பது குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி கே சந்துரு அவர்களின் பிரத்யேக செவ்வி;
அடுத்து இந்த உச்சநீதிமன்றம் ஜெயலலிதாவுக்கு ஜாமீன் அளித்திருப்பது குறித்து சென்னைவாசிகள் சிலரின் கருத்துக்கள்;
2005-ம் ஆண்டில், ஹெல்பிங் ஹம்பாந்தோட்டை ஊழல் குற்றச்சாட்டின் போது, மகிந்த ராஜபக்ஷவை சிறையில் அடைக்காமல் விட்டமைக்காக தான் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கோரவேண்டுமென அப்போதைய தலைமை நீதியரசர் சரத் என் சில்வா தெரிவித்துள்ளது குறித்த செய்தி; இலங்கையின் முன்னாள் இராணுவத் தளபதியும், ஜனநாயகக் கட்சியின் தலைவருமான சரத் பொன்சேகா அவர்களின் பெயரை வாக்காளர் பட்டியலில் இருந்து இலங்கை தேர்தல் ஆணையர் நீக்கியுள்ளது குறித்த செய்தி;
சமீபத்தில் இலங்கையின் வடக்குக்கு வந்த ஜனாதிபதியை வடமாகாண முதல்வர் புறக்கணித்திருந்த பின்னணியில் வடமாகாண சபையின் குறைநிவர்த்திக்கான முதலாவது நடமாடும் சேவையை வவுனியா மாவட்ட அரச அதிகாரிகள் இன்று வெள்ளிக்கிழமை புறக்கணித்திருப்பது பெரும் சர்ச்சையாக உருவெடுத்திருப்பது குறித்த செய்தி;
மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் அணியினர், இந்தியாவில் விளையாடிவரும் கிரிக்கெட் தொடரை பாதியில் நிறுத்திக்கொண்டு நாடு திரும்புவார்கள் என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ அறிவித்துள்ளது குறித்த செய்தி ஆகியவற்றைக் கேட்கலாம்.
