அக்டோபர் 19, 2014 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி

Oct 19, 2014, 05:52 PM

Subscribe

இன்றைய (19-10-2014) பிபிசி தமிழோசையில்

இந்தியாவில் சட்டமன்றத்தேர்தல்கள் நடந்த ஹரியானா மற்றும் மஹாராஷ்ட்ரா ஆகிய இரு மாநிலங்களிலும் ஆளும் பாஜக வெற்றிபெற்றிருப்பது குறித்த செய்திகள்;

பாஜகவுக்கு தொடரும் இந்த தேர்தல் வெற்றிக்கு நரேந்திர மோடி காரணமா என்பதை அலசும் ஆய்வுக்கண்ணோட்டம்

இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சிகளில் தான் விமர்சிப்பதால் அரசாங்க அமைச்சர்கள் சிலரிடமிருந்து தனக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுவருவதாக எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க கூறியுள்ளது குறித்த செய்தி

கத்தோலிக்கத் திருச்சபையில் ஒருபாலுறவுக்காரர்களுக்கு பரவலான அங்கீகாரம் அளிக்கப்பட வேண்டும் என்ற போப்பாண்டவரின் ஆதரவு கொண்ட பிரேரணைகளை வத்திகானத்தில் நடந்த Sinod எனப்படும் பேராயர்களின் கூட்டம் நிராகரித்திருப்பது ஏமாற்றம் அளிப்பதாக கத்தோலிக்க ஒருபாலுறவுக்கார உரிமைக் குழுக்கள் தெரிவித்துள்ளது குறித்த செய்திகள்;

பாஜகவின் தொடரும் தேர்தல் வெற்றிக்கு அந்த கட்சியின் பிரதமர் நரேந்திர மோடியும் முக்கிய காரணம் என்று அவரது ஆதரவாளர்கள் கூறுவது சரியா என்பது குறித்து பிடிஐ செய்தி நிறுவன செய்தியாசிரியர் சந்திரசேகரனின் ஆய்வுக்கண்ணோட்டம்;

இந்தியாவில் விற்கப்படும் மருந்துகளின் விலைகள் கடுமையாக ஏறியிருப்பதற்கு மத்திய அரசின் சமீபத்திய உத்தரவே காரணம் என எழுந்திருக்கும் விமர்சனங்கள் குறித்த செய்தி ஆகியவற்றைக்கேட்கலாம்.