அக்டோபர் 20, 2014 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி

Oct 20, 2014, 05:15 PM

Subscribe

இன்றைய (20-10-2014) பிபிசி தமிழோசையில்

இலங்கையின் அடுத்த ஜனாதிபதித்தேர்தல் வரும் ஜனவரியிலேயே நடக்குமென இலங்கை அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டிருப்பது குறித்த செய்திகள்;

இலங்கையில் நடந்தது இனப்படுகொலையே என்று வடமாகாணசபையில் தீர்மானம் நிறைவேற்றவேண்டுமென சிவாஜிலிங்கம் வைத்த கோரிக்கை ஏற்கப்படாதது தொடர்பில் உருவாகியிருக்கும் சர்ச்சை குறித்த செய்திகள்;

இந்த தேர்தல் அறிவிப்பை ஆட்சியில் பங்குபெற்றிருக்கும் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் கட்சி எப்படி பார்க்கிறது என்பது குறித்து அந்த கட்சியின் துணைச்செயலர் நிசாம் காரியப்பரின் செவ்வி;

இலங்கையிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் கடலுணவுப்பொருட்களுக்கு ஐரோப்பிய ஒன்றியம் வித்தித்துள்ள தடையை நீக்கக்கோரி இன்று நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டம் மீது கற்கள் வீசப்பட்டதில் பதட்டம் ஏற்பட்டது தொடர்பான செய்தி;

ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டு சிறையில் இருந்து ஜாமீனில் வெளிவந்திருக்கும் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஆதரவும் அனுதாபமும் தெரிவித்து மத்திய அமைச்சர் மேனகா காந்தி எழுதிய கடிதம் பாஜக கருத்தல்ல என்று அந்த கட்சியின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறித்த செய்திகள்;

விலங்குகள் மீது பரிசோதனை செய்யப்பட்ட அழகு சாதனப் பொருட்களின் இறக்குமதிக்கு இந்திய அரசு தடை விதித்துள்ளது குறித்த செய்தி; நைஜீரியாவில் கடந்த ஆறு வாரங்களாக புதிதாக யாருக்கும் இபோலா தொற்று ஏற்படாத காரணத்தால், நைஜீரியாவை இபோலா தொற்று இல்லாத நாடாக உலக சுகாதார நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது குறித்த செய்தி ஆகியவற்றைக் கேட்கலாம்.