அக்டோபர் 22, 2014 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி

Oct 22, 2014, 04:45 PM

Subscribe

இன்றைய (22-10-2014) பிபிசி தமிழோசையில்

ஜெனீவாவில் உள்ள இலங்கை தூதரக அலுவலகத்தை புதுப்பிப்பதற்கு விடுதலைப் புலிகளோடு தொடர்புடைய நிறுவனம் ஒன்றுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு பெரும் சர்ச்சையாக உருவெடுத்திருப்பது குறித்த செய்தி

இப்படி குற்றம் சாட்டப்படும் அந்த நிறுவன உரிமையாளர் பிபிசி தமிழோசைக்கு அளித்த பிரத்யேக செவ்வி;

இந்தியாவின் பெங்களூரில் மூன்றுவயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டிருப்பதாக எழுந்துள்ள புகார் குறித்த செய்தி இந்தியாவில் அதிகரித்துவரும் சிறார் துஷ்பிரயோக புகார்கள் குறித்த ஆய்வுக்கண்ணோட்டம்

மனிதர்களின் நோய்த்தடுப்புக்கு சாதாரண வீட்டு ஈயின் மரபணுவில் துப்புகிடைக்கும் என்று மருத்துவ ஆய்வாளர்கள் நம்பிக்கை வெளியிட்டிருப்பது குறித்த செய்தி;

நிறைவாக பலகணியில் இந்திய சந்தையில் அறிமுகமாகும் ஹலால் ஒப்பனைப் பொருட்கள் குறித்த பெட்டகம் ஆகியவற்றைக் கேட்கலாம்.