அக்டோபர் 25, 2014 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி

Oct 25, 2014, 04:36 PM

Subscribe

இன்றைய (25-10-2014) பிபிசி தமிழோசையில்

உலகை அச்சுறுத்திவரும் இபோலா நோய்த்தொற்று தாக்கியவர்களின் எண்ணிக்கை பத்தாயிரத்தைத் தாண்டியிருப்பதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்திருப்பது குறித்த செய்திகள்;

இலங்கையில் 19-ம் நூற்றாண்டில், சிங்கள பௌத்த தேசியவாதத்தை நிறுவிக்கட்டமைத்த முன்னோடிகளில் ஒருவராக வர்ணிக்கப்படும் அனகாரிக தர்மபாலவின் நினைவுத்தபால்முத்திரை ஒன்றை இந்திய அரசு வெளியிட்டிருக்கும் நிலையில் அவரது பங்களிப்பு குறித்த ஒரு செவ்வி;

தமிழக அரசின் ஆவின் பாலின் விற்பனை விலை 40 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ள நிலையில் அதன் பலாபலன்கள் விவசாயிகளுக்கு கிடைக்கிறதா என்பது குறித்து அவர்களின் கருத்துக்கள்;

இலங்கையின் கிழக்கே அம்பாரை மாவட்டத்தில் விவசாயிகளுக்கும் கால்நடை வளர்ப்போருக்குமிடையில் நிலம் தொடர்பாக இன்று மோதல் நிலை ஏற்பட்டு காவல்துறையின் தலையீட்டில் வன்முறை தவிர்க்கப்பட்டுள்ளது குறித்த செய்தி;

நிறைவாக நேயர் நேரம் ஆகியவற்றைக் கேட்கலாம்.