'தமது ஆட்சியில் ஒருவர் காணாமல்போனாலும் அரசியலைத் துறப்பேன் என்றவர் தான் மகிந்த'
Share
Subscribe
இலங்கையில் சுதந்திரக்கட்சி ஆட்சியின்போது, ஒருவர் காணாமல்போனாலும் அரசியலைத் துறப்பேன் என்று 1989-இல் வாக்குறுதி அளித்தவர் தான் தற்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ என்கிறார் மனித உரிமைகள் செயற்பாட்டாளரான பிரிட்டோ பெர்ணான்டோ.
காணாமல்போனோர் தொடர்பான தேசிய நிகழ்வின் ஏற்பாட்டாளர்களை அச்சுறுத்தும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருக்கின்றமை தொடர்பில் பிபிசி தமிழோசையின் ஜெயப்பிரகாஷ் நல்லுசாமிக்கு அளித்துள்ள செவ்வியிலேயே பிரிட்டோ பெர்ணான்டோ இதனைக் கூறியுள்ளார்.
