அக்டோபர் 26, 2014 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி

Oct 26, 2014, 05:50 PM

Subscribe

இன்றைய (26-10-2014) பிபிசி தமிழோசையில்

இலங்கையில் காணாமல்போனவர்களின் தேசிய நினைவுதினம் நாளை நடக்கவுள்ளநிலையில், அந்த நிகழ்வின் ஏற்பாட்டாளர்களை அச்சுறுத்தும் விதமான போஸ்ட்டர்கள் ஒட்டப்பட்டிருப்பது குறித்த செய்திகள்;

இலங்கையின் வடக்கே கிளிநொச்சி மாவட்டத்தில் பயங்கரவாத செயற்பாடுகளுடன் தொடர்புடையவர் என்கிற குற்றச்சாட்டின் கீழ் 58 வயதுடையவர் ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பது குறித்த செய்தி;

இலங்கைக்கு வந்த சீனாவின் நீர்மூழ்கிக்கப்பல் தொடர்பில் இந்தியா இலங்கையிடம் தனது அதிருப்தியை தெரிவித்ததாக வெளியாகியிருக்கும் செய்திகள் தொடர்பான அலசல்;

இந்தியாவில் ஆறு சுற்றுச்சூழல் சட்டங்களை இந்திய அரசு தற்போது மீளாய்வு செய்யும் முறைக்கு சுற்றுச்சூழல் அமைப்பாளர்கள் கடும் விமர்சனம் தெரிவிப்பது ஏன் என்பது குறித்து சுற்றுச்சூழல் கண்காணிப்புக்குழு அமைப்பின் ஆலோசகர் நித்தியானந்த் ஜெயராமின் செவ்வி;

இந்திய தலைநகர் டெல்லியில் தீபாவளியை ஒட்டி உருவான மதமோதல் உருவாக்கியிருக்கும் பதற்றம் தொடர்பான செய்திகள்;

இந்தியா பாகிஸ்தானுக்கு இடையில் காஷ்மீர் பிராந்தியத்தில் அண்மையில் அதிகரித்துள்ள முருகள் நிலை காரணமாக இருதரப்பிலும் உள்ள பொதுமக்கள் சந்திக்கும் சிக்கல்கள் குறித்த செய்திகள் ஆகியவற்றைக் கேட்கலாம்.