'மலையக மக்கள் தேயிலை போன்று பண்டங்களாகவே மதிக்கப்படுகின்றனர்'
Share
Subscribe
தோட்ட வீடமைப்பில் உள்ள குறைபாடுகளே பதுளை மாவட்ட ஹொஸ்லந்தை நிலச்சரிவின் போது அதிகமான லயன்கள் புதையுண்டு போனதற்கான காரணம் என்று விமர்சனங்கள் எழுந்துள்ளன.
வெள்ளையர் ஆட்சியில் ஏற்படுத்தப்பட்ட இந்த லயன்களில், மோசமான சூழ்நிலையில் தோட்டத் தொழிலாளர் குடும்பங்கள் வைக்கப்பட்டிருந்ததை பல மலையக ஆய்வாளர்க்ளும், மனித உரிமை ஆர்வலர்களும் கண்டித்திருக்கிறார்கள்.
இந்த நிலச்சரிவு ஏற்பட்ட பகுதி, அபாயப் பகுதியாக முன்னரேயே எச்சரிக்கப்பட்டிருந்த போதிலும், அங்கு தொடர்ந்தும் மக்கள் வசித்ததற்கு, அவர்களுக்கு வேறு உரிய குடியிருப்பு வசதிகள் இல்லாமையே காரணம் என்று அவர்கள் கூறுகிறார்கள்.
மலையக வீடமைப்புக்கு பொறுப்பான இலங்கையின் கடந்த கால அரசாங்கங்கள், தோட்ட நிர்வாகங்கள் மற்றும் பெருந்தோட்ட தொழிற்சங்கங்களின் பொறுப்பின்மையே மலையக தொழிலாளர்களுக்கான வீடமைப்பில் உள்ள பலவீனங்களுக்கு காரணம் என்று கூறும் மனித உரிமைகள் ஆர்வலரும், மலையக ஆய்வாளருமான எஸ். பாலகிருஷ்ணன் அவர்கள், மலையக மக்கள் தேயிலையைப் போன்று பண்டங்களாகவே மதிக்கப்பட்டதாவும், அவர்களது உரிமைகள் எவையும் மதிக்கப்படவில்லை என்றும் குறைபடுகின்றார்.
தோட்ட வீடமைப்பில் இருக்கக் கூடிய பலவீனங்கள் குறித்து அவர் பிபிசிக்கு வழங்கிய முழுமையான செவ்வியை நேயர்கள் இங்கு கேட்கலாம்.
