அக்டோபர் 29, 2014 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி
Share
Subscribe
இன்றைய (29-10-2014) பிபிசி தமிழோசையில்
இலங்கை மலையகத்தில் வரலாறு காணாத மிகப்பெரிய மண்சரிவில் 300க்கும் மேற்பட்டோர் மண்ணில் புதையுண்டிருக்கலாம் என்று இலங்கை அமைச்சர் அச்சம் வெளியிட்டிருப்பது குறித்த செய்திகள்;
இதில் ஆறுபேர் அடங்கிய தன் ஒட்டுமொத்த குடும்பத்தையும் பறிகொடுத்தவரின் செவ்வி;
பதுளை கொஸ்லந்தை மண்சரிவு மீட்புப் பணிகளை நேரில் சென்று பார்த்துள்ள உள்ளூர் ஊடகவியலாளர் கே. வேலாயுதம் வழங்கும் நேரடிச் செய்திகள்;
இந்த குறிப்பிட்ட குடியிருப்புக்கு நிலச்சரிவு அபாயம் இருப்பதாக 10 ஆண்டுகளுக்கு முன்பே கூறப்பட்டிருந்தும் அந்த குடியிருப்பில் தொடர்ந்து தொழிலாளர்களை தங்கவைத்தது மிகப்பெரிய தவறு என்று கூறும் சுற்றுச்சூழலியல் ஆர்வலரின் கருத்துக்கள்;
மலையகத்தோட்டத்தொழிலாளர் குடியிருப்பு காலனிகாலத்தில் இருந்த நிலையிலேயே தொடர்ந்து நீடிக்க அனுமதித்ததே பிரச்சனையின் அடிப்படை காரணி என்று கூறும் மனித உரிமைகள் ஆர்வலரும், மலையக ஆய்வாளருமான எஸ். பாலகிருஷ்ணனின் விரிவான செவ்வி;
ஐநா மன்றத்தின் பயங்கரவாத எதிர்ப்பு நிறைவேற்றுக் குழுவினர் மூன்று நாள் பயணமாக இலங்கை சென்றுள்ளவர்கள் இன்று யாழ்ப்பாணம் சென்று வடமாகாண ஆளுனரை சந்தித்துள்ளது குறித்த செய்தி;
இலங்கைக்கான தனது ஐந்து நாள் விஜயத்தை நிறைவுசெய்துள்ள காமன்வெல்த் அமைப்பின் தலைமைச் செயலர் கமலேஷ் ஷர்மா, வட இலங்கையில் இராணுவத்தினரின் பிரசன்னமும் செயற்பாடுகளும் குறைக்கப்பட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளது குறித்த செய்தி;
இலங்கை அம்பாரை மாவட்டம் திருக்கோவில் பிரதேசத்தின் வட்டமடு பகுதியில் மேய்ச்சலுக்கு விடப்பட்ட இரனூ பசுக்களின் தலைகள் துண்டிக்கப்பட்டிருப்பதன் மூலம் தங்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருப்பதாக அந்த பகுதி கால்நடை பண்ணையாளர்கள் கவலை வெளியிட்டுள்ளது குறித்த செய்தி ஆகியவற்றை கேட்கலாம்.
