'பள்ளி சென்ற 75 பிள்ளைகளும் வெளி வேலைக்குச் சென்ற 30 பேரும் உயிர்தப்பினர்'

Oct 29, 2014, 07:44 PM

Subscribe

இலங்கையில் பதுளை மாவட்டத்தில் மண்சரிவில் சிக்கிய தேயிலைத் தோட்டக் குடியிருப்பில் கிட்டத்தட்ட 300 பேர் மண்ணில் புதையுண்டிருக்கலாம் என்று அஞ்சப்படுகின்றது. பள்ளிசென்ற பிள்ளைகளும் வெளியில் தொழிலுக்கு சென்றவர்களும் உயிர் தப்பியுள்ளதாக உள்ளூர் செய்தியாளர் கே. வேலாயுதம் பிபிசி தமிழோசையிடம் கூறினார்