அக்டோபர் 30, 2014 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி
Share
Subscribe
இன்றைய (30-10-2014) பிபிசி தமிழோசையில்
இலங்கை மலையகத்தில் நேற்று ஏற்பட்ட மிகப்பெரிய மண்சரிவில் காணாமல் போனவர்களை மீட்கும் நடவடிக்கைகள் சந்திக்கும் சவால்கள் குறித்து அங்கு நேரில் சென்றிருக்கும் மாணிக்கவாசகம் தரும் தகவல்கள்
இந்த குறிப்பிட்ட இடத்தில் மண்சரிவு ஏற்படும் என்று ஏற்கெனவே எச்சரித்திருந்த நிலையில் இவர்கள் தொடர்ந்தும் அங்கு குடிவைக்கப்பட்டது ஏன் என்கிற கேள்விக்கு அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் பதில்;
இந்த நிலச்சரிவின் பாதிப்பு மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து மலையக கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்களின் கருத்துக்கள்; இந்த நிலச்சரிவில் காணாமல் போன தமது உறவுகளைத் தேடி அலைபவர்களின் அவலம் இரண்டாம் நாளாக இன்றும் தொடர்வது குறித்த செய்திகள்;
தப்பிப்பிழைத்தவர்கள் வாழ்ந்த வீடும் வைத்திருந்த உடைமைகளும் முற்றாக இழந்த அதிர்ச்சியில் இருந்து இன்னமும் மீளாத துயரம் தொடர்பான செய்திகள்;
கொஸ்லந்த நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தொடருகின்ற நிலையில், அங்கு நடக்கும் மீட்புப் பணிகள் குறித்தும், இத்தகைய பேரழிவை தடுக்க முடியாமல் போனமை குறித்தும், பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரண நடவடிக்கைகள் குறித்து மலையக தொழிற்சங்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகள் மத்தியில் காணப்படும் பலவிதமான கருத்துக்கள்;
இந்திய மீனவர்கள் ஐந்து பேருக்கு போதை மருந்து கடத்திய குற்றச்சாட்டின் பேரில் இலங்கையில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டிருப்பதற்கு தமிழ்நாட்டில் எழுதிந்ருக்கும் எதிர்ப்பு குறித்த செய்திகள் ஆகியவற்றை கேட்கலாம்.
