"இந்த இடம் நிலச்சரிவு ஆபத்துள்ள இடம் என்று கம்பெனிக்கு கூறப்படவில்லை"

Oct 31, 2014, 05:48 PM

Subscribe

இலங்கையில் பதுளை மாவட்டம், ஹல்துமுல்லை பிரதேசத்தில் தேயிலைத் தோட்டக்குடியிருப்பு பகுதி முழுமையாக மண்சரிவில் புதையுண்டுபோன இடம் நிலச்சரிவுக்கு உள்ளாகும் ஆபத்துள்ள இடம் என்பது அந்த தோட்ட கம்பெனிக்கு தெரிவிக்கப்படவில்லை என்கிறார் இலங்கை பெருந்தோட்ட உரிமையாளர் சங்கத்தின் தலைவர் ருஷான் ராஜதுரை. இது குறித்து அவர் பிபிசி தமிழோசைக்கு ஆங்கிலத்தில் அளித்த பிரத்யேக செவ்வியின் விரிவான ஒலி வடிவத்தை நேயர்கள் இங்கே கேட்கலாம்.