பெற்றோரை இழந்த குழந்தைகளை ஏற்க வடமாகாண சபை விருப்பம்
Share
Subscribe
இலங்கையின் பதுளை மாவட்டம் கொஸ்லந்தை பகுதி நிலச்சரிவால் பெற்றோரை இழந்த குழந்தைகளை பராமரிக்கும் பொறுப்பை ஏற்க வட மாகாண சபை தயாராக இருப்பதாக அதன் உறுப்பினர்களில் ஒருவரும் அவை முதல்வருமான சி. வி. கே. சிவஞானம் அவர்கள் தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் குறித்து மாகாண சபை உறுப்பினர்கள் ஆராய்ந்து, ஏகமனதாக ஆதரவு வழங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அத்தோடு, இதற்காக உரிய தரப்பினருடன் மாகாண முதலமைச்சர் பி. விக்னேஷ்வரன் அவர்கள் பேச்சு நடத்தி வருவதாகவும் சிவஞானம் தெரிவித்தார்.
இந்த விடயம் குறித்த அவர் பிபிசிக்கு வழங்கிய செவ்வியை நேயர்கள் இங்கு கேட்கலாம்.
