நவம்பர் 1, 2014 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி
Share
Subscribe
இன்றைய (01-11-2014) பிபிசி தமிழோசையில்
இலங்கை மலையக மண்சரிவு ஏற்பட்டு நான்கு நாட்களான நிலையில் இன்று ஒரு பெண்ணின் சடலம் ஒன்று மீட்கப்பட்டிருப்பது குறித்த செய்திகள்;
இந்த குறிப்பிட்ட இடத்தில் மண்சரிவில் பெற்றோரை இழந்த பிள்ளைகள் தங்க வைக்கப்பட்டிருக்கும் முகாமுக்கு சென்றுள்ள மாணிக்கவாசகம் வழங்கும் செய்தித்தொகுப்பு;
இந்த குழந்தைகளை பராமரிக்கும் பொறுப்பை ஏற்க வட மாகாணசபை தயாராக இருப்பதாக கூறும் வடமாகாணசபை உறுப்பினர் சி. வி. கே. சிவஞானத்தின் செவ்வி;
தமிழக காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவராக இ வி கே எஸ் இளங்கோ நியமிக்கப்பட்டிருக்கும் நிலையில் தனது அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து நாளை மறுநாள் அறிவிக்கப்போவதாக ஜி கே வாசன் அறிவித்திருப்பது குறித்த செய்திகள்;
அடுத்து ஒரு காலத்தில் உலகின் மிகப்பெரிய நோக்கியா செல் போன் தயாரிப்பு தொழிற்சாலையாக வர்ணிக்கப்பட்ட சென்னையின் ஸ்ரீபெரும்புதூர் நோக்கியா செல்போன் உற்பத்தி ஆலை இன்று முதல் மூடப்பட்டுள்ளது குறித்த ஒரு செய்தித் தொகுப்பு;
இந்திய நடுவண் அரசு நடப்பு நிதியாண்டில் தனது திட்டமிடப்படாத செலவினங்களை பத்து சதவீம் குறைப்பதற்கான நடவடிக்கைகள் பற்றி பிறப்பித்திருக்கும் உத்தரவின்படி, இந்திய அரசு அதிகாரிகள் விமானத்தில் முதல் வகுப்பில் பயணிப்பது, ஐந்து நட்சத்திர விடுதிகளில் கூட்டங்களை நடத்துவது, புதிய வாகனங்களை வாங்குவது போன்றவை தடுக்கப்படுவதும் புதிய பணி நியமனங்கள் செய்யப்படுவதை நிறுத்திவைபதன் மூலமும் அரசின் வரவுசெலவுத் திட்டத்தில் துண்டு விழும் தொகையைக் குறைக்க முடியுமா என்பது குறித்து இந்தியாவின் முன்னாள் வருவாய்ச் செயலரும், சர்வதேச நாணய நிதியமான ஐ எம் எஃப்பின் இந்திய செயல் இயக்குநர்களில் ஒருவருமான எம் ஆர் சிவராமனின் பிரத்யேகச் செவ்வி ஆகியவற்றை கேட்கலாம்.
