'பாதுகாப்பான காணியும், வீடுமே தீர்வு' - சுரேஷ் பிரேமச்சந்திரன்

Nov 02, 2014, 01:05 PM

Subscribe

ஒரு பாதுகாப்பான இடத்தில் காணியும், வீடுமே நிலச்சரிவால் பாபிக்கப்பட்ட கொஸ்லந்தை மக்களின் உடனடித் தேவை என்று தமிழ் தேசியக் க்கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட இடங்களையும், பாதிக்கப்பட்ட மக்களையும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று பார்வையிட்டுள்ளார்கள்.

மீட்புப் பணிகள் ஒருபுறம் தொடரும் நிலையில், அகதி முகாம்களில் தங்கியிருக்கும் மக்களையும் அவர்கள் சந்தித்து உரையாடியிருக்கிறார்கள்.

இலங்கையின் வடக்கு, கிழக்கு மற்றும் கொழும்பு உடபட பல இடங்களிலும் இருந்து தமக்கு கிடைத்த உடனடி நிவாரணப் பொருட்கள் தமக்கு போதுமாக இருப்பதாக அந்த மக்கள் தம்மிடம் கூறியதாகவும், ஆனாலும் பாதுகாப்பான ஒரு இடத்தில் ஒரு வீடுதான் தமது பிரச்சினைக்கு தீர்வாக அமையும் என்று அவர்கள் குறிப்பிட்டதாகவும் அங்கு சென்று வந்த நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் பிபிசி தமிழோசையிடம் கூறினார்.

அவரது முழுமையான செவ்வியை நேயர்கள் இங்கு கேட்கலாம்.